விஜய் படத்தை இயக்கும் நயன்தாரா இயக்குநர்
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் லலித் வழங்கும் இந்த படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போடப்பட்டு, வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் தள்ளி போனதாகவும் விஜய் வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
பேரரசு, சுதா கொங்கரா, மகிழ் திருமேனி என பல பெயர்கள் அடிபட்டன. இந்த வரிசையில் தற்போது கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சனும் இணைந்துள்ளார். அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கி உள்ளார். நெல்சன் சொன்ன குடும்ப காமெடி கதைக்கு விஜய் சம்மதம் சொல்வாரா என்பதே இப்போதைய தமிழ் சினிமாவின் பரபரப்பு.