Tamilசினிமா

விஜய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

லியோவை தொடர்ந்து `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (`THE GOAT’) படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. சென்னை, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. கிளைமேக்சில் 15 நிமிடங்கள் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜயும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துப்போய் உள்ளனர்.

இதனிடையே, அமரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘எஸ்கே 23’படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.