Tamilசினிமா

விஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை எழுதுவதோடு, அவரே பாடவும் உள்ளாராம்.

ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடல், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ ஆகிய பாடல்களின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆகையால், நெல்சன் அடுத்ததாக இயக்கும் பீஸ்ட் படத்திற்கும் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுத உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.