X

விஜய் படத்தால் ஏமாற்றம் அடைந்த ஆண்ட்ரியா!

சினிமாத்துறையில் நடிகை என்பதையும் தாண்டி பாடகி, பாடலாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்கள் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது: முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. `வெறித்தனம்’ பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் இருக்கியா’னு என்னைக் கலாய்ச்சார்.

விஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின `கூகுள் கூகுள்’ செம ஹிட். அதே மாதிரி `மாஸ்டர்’லயும் வாய்ப்பு கிடைக்கும்னு உங்களை மாதிரியே நானும் எதிர்பார்த்தேன். ஆனா, பெண் பாடகியே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.