விஜய் தேவர்கொண்டாவுடன் மாலத்தீவுக்கு சென்றது உண்மையா? – நடிகை ராஷ்மிகா மந்தனா பதில்

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’, விஜய் ஜோடியாக ‘வாரிசு’ படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடை விதிக்கும்படி வற்புறுத்தினர். நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாகவும், அவருடன் மாலத்தீவுக்கு சென்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், “சமீபகாலமாக சமூக வலைதளங்களில் என்மீது அவதூறு செய்வது அதிகமாகிவிட்டது. சிறு வயது முதலே ஹாஸ்டலில் தங்கி படித்தேன். பள்ளியில் அதிகமாக யாரோடும் சேரமாட்டேன். அதனால் நிறைய பேர் எனக்கு திமிர் என்று தவறாக புரிந்து கொண்டார்கள். அறையில் தனியாக உட்கார்ந்து அழுத நாட்கள் கூட உண்டு.

வாழ்க்கையில் இன்னும் நிறைய தூரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. இந்த சிறிய பிரச்சினைக்கு நீ இப்படி இடிந்து போய்விட்டால் எப்படி என்று அம்மா சொன்ன வார்த்தைகள் எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தன. ஒரு எல்லை வரை காத்திருப்பேன். எல்லை தாண்டினால் யாராக இருந்தாலும் சரி எதிர்த்து பதிலடி கொடுப்பேன்.

மாலத்தீவுக்கு விஜய் தேவரகொண்டாவுடன் சென்றீர்களாமே? அவருடன் காதலில் இருக்கிறீர்களா? இப்படி எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். விஜய் தேவரகொண்டா எனது நண்பர். அவரோடு ‘டூர்’ சென்றால் தவறு என்ன?” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools