தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.
அதன்பின்னர் மீண்டும் இந்த கூட்டணி புதிய படத்தில் ஒப்பந்தமாகிவுள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜேஜிஎம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி பல்வேறு நாடுகளில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.