Tamilசினிமா

விஜய் சேதுபதி படத்தில் இலங்கை தமிழ் பேசி நடித்த கனிகா

பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார் கனிகா.

சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற முக்கியமான படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் வெளியான வரலாறு தான் தமிழில் கனிகா நடித்த கடைசி படமாகும். தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கியுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரித்துள்ள, இப்படத்தில் நடிகர் விவேக், இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை கனிகா வெளியிட்டுள்ளார். அதன்படி யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் டப்பிங் பேசியது ஸ்பெஷலான அனுபவம். ஏனெனில் இதில் இலங்கை தமிழ் பேசியுள்ளேன் என கனிகா பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *