Tamilசினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் வில்லனான கெளதம் மேனன்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்.சி.புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது. இதில் இளம் நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் வில்லனாக நடிக்கிறார். பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன் சில படங்களிலும், வலைத்தளத் தொடர்களிலும் நடித்து தன்னுடைய நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவர் இந்த படத்தில் இணைந்திருப்பது ‘மைக்கேல்’ படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.