விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ரிலீஸானது
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
’சங்கத்தமிழன்’ படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பண பிரச்சனை காரணமாக படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது இதில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளதால் இன்று இரவு முதல் ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.