தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான அவரது சங்கத்தமிழன் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் என தமிழில் அடுத்தடுத்து ரிலீசுக்கு அவரது படங்கள் தயாராகி வருகின்றன.
இது தவிர தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்தியிலும் அமீர்கானுக்கு வில்லனாக மிரட்ட இருக்கிறார். இந்நிலையில், தனக்கு பிடித்த நான்கு நடிகர்கள் பற்றி பேசியுள்ளார் விஜய் சேதுபதி.
அதில் முதல் இடத்தில் நடிகர் சிவாஜியின் பெயரை அவர் கூறியிருக்கிறார். எந்தவொரு கதாபாத்திரத்தையும் சர்வ சாதாரணமாக செய்ய முடியும் என்பதால் அவரை பிடிக்குமாம். இரண்டாவது இடத்தில் கமல் உள்ளார். திறமையான நடிகராக, கதைக்கு ஏற்ப, எந்த ஒரு கதாபாத்திரத்திலும் கமலால் நடிக்க முடியும் என விஜய் சேதுபதி அவரைப் பாராட்டியுள்ளார்.
3வது இடத்தில் மலையாள நடிகர் மோகன் லாலை கூறிய விஜய் சேதுபதி, அவர் எளிதாக நடிக்கக்கூடியவர் என்றார். மேலும், எம்ஜிஆரை தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ள விஜய் சேதுபதி, அவரின் புத்திசாலித்தனமான நடிப்பு மற்றும் கதை தேர்வு செய்யும் விதம் எல்லாமே தனக்கு பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.