விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி ஹீரோயின்கள்!

விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் படங்கள் தயாராகி வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் காமெடி நடிகர் சூரி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் 2 கதாநாயகிகள் யார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இருவருமே சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் கதாநாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools