கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி அடுத்ததாக தமிழரசன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. முதல்முறையாக விஜய் ஆண்டனி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகன் இந்த படத்தின் மூலம் அறிமுகமாவதாக மோகன் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.