வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரவுள்ளது.
இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து லோகேஷ் இயக்கவிருக்கும் விஜய் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்த்து எழுந்திருக்கிறது.
இந்த படத்தில் விஜய்க்கு எதிராக ஒரு வில்லி கதாப்பாத்திரம் இடம் பெற்றிருப்பதாகவும், இதற்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் முன்னணி நடிகை ஒருவர் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில் சமந்தா தான் விஜய்க்கு வில்லியாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா இதற்குமுன்பு விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் படங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.