Tamilசினிமா

விஜயை பார்த்து ஆச்சரியப்பட்டேன் – நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தில் பூங்கொடியாக நடித்து பலரைக் கவர்ந்தார். மாஸ்டர் படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் விஜய் பற்றி கூறியிருப்பதாவது,

‘ஒவ்வொரு நடிகருக்குமே தனிப் பாணி உள்ளது என நினைக்கிறேன். விஜய்யைப் பொறுத்தவரை அவர் எப்படித் தயார் செய்து கொள்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவரது ஒழுக்கம் வியக்க வைத்தது. நட்சத்திரங்கள் திரையில் நடிக்கும்போது எப்படி இதை எளிதாகச் செய்கிறார்கள் என்று தோன்றும். ஆனால், உண்மையில் அதற்காக நிறைய யோசனைகளும், ஆய்வும் நடக்கின்றன.

பல பக்க வசனங்களைப் படித்து அதை ஒரே டேக்கில் பேசி முடிப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டி விஜய்யுடன் தொழில்முறையில் பணியாற்றியது உற்சாகம் அளிப்பதாக இருந்தது. அவர் அளவுக்கு பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.