நடிகர் சமுத்திரகனி சமூக அக்கறை கொண்ட கதைகளை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் லட்சுமி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.
இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பெட்டிக்கடை என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட ஆசிரியராக நடிக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமுத்திரகனி பேசும்போது, பெட்டிக்கடைகளின் அழிவு அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார்.
இயக்குனர் திடீர் என்று ஒரு நாள் வந்து சர்கார் படத்துடன் நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம். அவங்க சர்காரைப் பற்றி சொல்றாங்க. நாம சமூக விரோதிகளைப் பற்றி சொல்றோம்.
ஒரே தேதியில் ரிலீஸ் செய்வோம் என்றார். நான் தான் அப்படியெல்லாம் வேண்டாம். நமக்கு என்று ஒரு தேதி வரும் அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன். அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை’. இவ்வாறு சமுத்திரகனி பேசினார்.