விஜயுடன் இணையும் கதிர்!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், பரியேறும் பெருமாள் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகி இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு வருகிற 20-ந் தேதி தொடங்கவிருக்கிறது.
படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.