X

விஜயுடன் இணைந்த மூன்று இளம் நடிகைகள்

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் கால்பந்து வீராங்கனைகளாக இளம் நடிகைகள் பலர் படத்தில் இணைந்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான் ஆகியோர் நடித்து வரும் நிலையில் தற்போது 96 படத்தில் விஜய் சேதுபதியுடன் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இணைந்துள்ளார். இந்த மாத இறுதி வரை சென்னையில் படப்பிடிப்பை நடத்தும் படக்குழு அதன்பின் டெல்லி செல்ல உள்ளது. டெல்லியில் மே 3-ந் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.

நயன்தாரா தற்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில், விரைவில் அவர் இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.