விஜயின் 67 வது படத்தில் நடிப்பது உண்மையா? – நடிகை திரிஷா பதில்
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தொகுப்பாளர் திரிஷாவிடம் நீங்கள் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திரிஷா ” என்னிடம் இப்பொழுது பொன்னியின் செல்வன் படம் குறித்து மட்டுமே பேச சொல்லி இருக்கிறார்கள்” என்று கூறினார்.
‘தளபதி 67’ படத்தில் நடிப்பதை திரிஷா மறுக்கவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.