நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதன்படி, விஜய்யின் 66-வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்நிறுவனம் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தது. அதேபோல் இப்படத்தை இயக்குவதற்காக லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், அட்லீ, அஜய் ஞானமுத்து ஆகிய நான்கு இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.