நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அனைவரையும் தாளம் போட வைத்து உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலானது. அரபிக் குத்து வீடியோ பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்த அரபிக் குத்து வீடியோ பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.