அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார். முன்னதாக அழகிய தமிழ்மகன், மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய போதும் ரகுமான் இசையில் விஜய் பாடியதே இல்லை.
பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர். இதில் கதாநாயகி நயன்தாரா மருத்துவ மாணவியாக நடிப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தின் பாடல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ’சிங்கபெண்ணே’ பாடல் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.