விஜயின் குட்டி கதையை பயன்படுத்திக் கொண்ட தமன்னா

தமன்னா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பெட்ரோமாக்ஸ்’. ஈகிள் ஐ புரொடக்ஷன் தயாரித்திருக்கும் இப்படத்தை ‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.

யோகிபாபு, மன்சூர் அலிகான், பகவதி, காளி வெங்கட், சத்யன், முனீஸ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அக்டோபர் 11 தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இந்த டிரைலர் ஆரம்பத்தில் விஜய்யின் குட்டி கதை சொல்வது போல் தொடங்குகிறது. அதன்பின் கதை மற்றும் கேரக்டர்கள் விளக்கி சொல்லப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools