தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இதையடுத்து தே.மு.தி.க. தலைமைக்கழகம் கூறியிருப்பதாவது:
விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.