X

விசாகப்பட்டினத்தில் ஆட்டோ லாரி மீது மோதி விபத்து – 8 பள்ளி மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கம் சரத் தியேட்டர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாலையின் சந்திப்பில் அதிவேகமாக வந்த ஆட்டோ எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், ஆட்டோக்குள் இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர். ஆட்டோக்குள் இருந்த 8 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், இரண்டு மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Tags: tamil news