விக்ராந்த் படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி
விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. ஜெகதீசன் சுபு இயக்கி வரும் இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், இமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்து வியந்திருக்கிறார். மேலும் விக்ராந்த் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தி படத்தை தானே வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தமிழகம் முழுவதும் வெளியிடும் பக்ரீத் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.