மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பாலிவுட்டில் இப்படம் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவன் – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க, பி.எஸ்.வினோத் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படம், தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய்சேதுபதியாக அமீர் கானும் நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இதை பாலிவுட்டிலும் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது. மார்ச் 2020ல் படப்பிடிப்பை தொடங்கி அந்த ஆண்டின் இறுதியிலேயே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.