X

விக்ரம் மகனுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ் குமார்

ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே நடித்துள்ள 100 சதவீத காதல் படமும் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் வர்மா படமும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று திரையில் மோத இருக்கின்றன.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தெலுங்கில் வெளியான அந்த படம் தென்னிந்தியத் திரையுலகம் முழுக்க கவனம் பெற்றது.

ஜி.வி.பிரகாசுடன் ஷாலினி நடித்த 100 சதவீத காதல் படம் தெலுங்கில் வெளியான 100 சதவீதம் காதல் படத்தின் ரீமேக். சந்திரமெளலி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படமும் திரைக்கு வர உள்ளது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.