விக்ரம் பிரபுவை பாராட்டிய ரஜினிகாந்த்

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணாக்காரன்’ திரைப்படம் கடந்த 8-ந்தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன்
உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டாணாக்காரன் திரைப்படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், டாணாக்காரன் படத்தில் தன்னுடைய நடிப்பிற்காக
பாராட்டியதாகவும் நடிகர் விக்ரம் பிரபு தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘என்னுடைய நடிப்பை பாராட்டி சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வந்தது மிகப்பெரிய உணர்வு. நான் கனவு காணத்துணியாத
ஒன்றைச் சாதித்தேன். உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றுவது வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகளை உருவாக்கும். டாணாக்காரன் குழுவிற்கு வாழ்த்துக்கள்! கடவுள் ஆசிர்வதிக்கட்டும்!’ என்று பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools