சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இப்படம் வெற்றி பெறவே அடுத்தடுத்து வாணி போஜனுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
தற்போது இவரது நடிப்பில் லாக்கப் திரைப்படம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு, வைபவ் நடித்துள்ள லாக்கப் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.