ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் வெளியானது. இதில் திரையுலக முன்னணி பிரபலங்களான கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
கமலின்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் இப்படத்தை தயாரித்துள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ‘விக்ரம்’ படம் திரையிடப்பட்டுள்ளது. இதில் சூர்யா வரும் காட்சியின் போது திரையின் ஒரு பக்கம் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அலறியடித்துக் கொண்டு வேகமாக வெளியேறினர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.