Tamilசினிமா

விக்ரமின் பல கெட்டப்புகள் – வைரலாகும் ‘கோப்ரா’ பாடல்

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி உள்ளார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்,
ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத்
திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில்
சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ரசிகர் ஒருவர் கோப்ரா படம் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த
இயக்குனர் அஜய் ஞானமுத்து, ‘கோப்ரா’ படத்தை மே 26 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடலான அதீரா என்ற பாடலை படக்குழு
வெளியிட்டுள்ளது. இதில் விக்ரம் பல தோற்றத்தில் இருக்கும் மேக்கிங் வீடியோ இடம்பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.