X

வாய்ப்புக்காக இயக்குநர்கள் தவறாக நடந்துக்கொண்டார்கள் – நடிகை யாஷிகா ஆனந்த்

துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமாகி விட்டார். சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா, நீண்ட சிகிச்சை எடுத்து திரும்பினார். இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் யாஷிகா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

தனது ஆரம்பக்கால சினிமா வாழ்க்கையில், வாய்ப்பு தேடும் பொழுது, பல இயக்குநர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார்கள். இன்னும் சில இயக்குநர்கள் தவறான காட்சிகளை நடித்துக் காட்டுமாறு கேட்டார்கள். ஆனால், நான் அதையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.