X

வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட நடிகர் சூரி

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக
உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ளது.

வாடிவாசல் படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இந்நிலையில் படத்தின் ஒத்திகையின் போது
எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் சூரி பதிவிட்டு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில், “அண்ணன் வெற்றிமாறன் – அண்ணன் சூர்யா மிரட்டும் “வாடிவாசல்” டெஸ்ட் ஷூட்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்தக் காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்” எனக்
பதிவிட்டுள்ளார்.