நீலகிரி, ஈரோடு சிசிடிவி கேமராக்கள் பழுதான நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னையிலும் ஆய்வு செய்தார். உடன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு அறைக்கு 16 கேமராக்கள் உள்ளன. போதுமான கேமராக்கள் இருக்கிறதா, முறையாக வேலை செய்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். சென்னையில் 3 தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில், 4 அடுக்கு பாதுகாப்பு டோப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு 140 போலீசார் வீதம், 3 ஷிப்ட் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்