Tamilசெய்திகள்

வாகன பேரணியுடன் மோடி ரத யாத்திரை! – தமிழகத்தில் நடைபெறுகிறது

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் ‘நம்மவர் மோடி’ என்ற தலைப்பில் ரதயாத்திரை சுற்றுப் பயணத்தை மத்திய அரசு மேற்கொள்ள இருக்கிறது.

பிரதான் மந்திரி ஜன்லக்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுவதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, வேலை வாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பதிகுக்கு ஒருங்கிணைந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களின் அறிமுக விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இதில், மாநில பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மாநில கெளரவ தலைவர்களாக ஓய்வு பெற்ற நீதியரசர்கள் கிருஷ்ணன், வள்ளிநாயக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பிரிவு மாநில செயலாளராக சசிகலாவும், பிரசார பிரிவு மாநில செயலாளராக சூரிய நாராயணனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் பிரிவு மாநில செயலாளராக கணேஷும், மாநில ஒங்கிணைப்பாளராக ராம்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நம்மவர் மோடி ரத யாத்திரைக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து நியமிக்க உள்ளார்.

இதில், கல்வியாளர்கள், பிரபல சமூக ஆர்வலர்கள், மக்கள் சேவையில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என மாவட்டம் தோறும் பல்வேறு தரப்பிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். இவர்களை கண்டறிந்து நியமிப்பதற்காகவே, நம்மவர் மோடி ரத யாத்திரை ஜனவரில் நடிஅபெற உள்ளது.

இந்த ரத யாத்திரையில் சுமார் 250 இரு சக்கர வாகன பேரணியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *