X

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு – 8 ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்கிறது. இன்றும் நாளையும் லேசான மிதமான மழை பெய்யக் கூடும்.

8-ந்தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை இன்று பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: tamil news