X

’வலிமை’ படத்தில் இரண்டாம் பாடல் டிசம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ்

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் ‘நாங்க வேற மாறி’ பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூடியூப்பில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

இதனையடுத்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் வலிமை படத்தின் 2வது பாடல் புரமோ இன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதன் முழு பாடல் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. தாய் மகன் பாசத்தை உணர்த்தும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத, சித் ஸ்ரீராம் பாடி இருக்கிறார்.