X

‘வலிமை’ படத்தின் முதல் பாடல் இன்று இரவு வெளியாகிறது

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வலிமை படக்குழு, தற்போது அதே பாணியில் அடுத்த அப்டேட்டையும் வெளியிட உள்ளதாம். அதன்படி இன்று இரவு 10 மணிக்கு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.