Tamilசினிமா

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இரண்டாம் பாகத்திற்கு நோ சொல்லும் சிவகார்த்திகேயன்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனிடையே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் பரவி வந்தது.

இதற்கு பதில் அளித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்று பேச்சுவார்த்தை நடந்தது. என்னை பொறுத்தவரை அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடியாது. ரெமோ படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் இன்னொரு படம் எடுக்கலாம்” என்றார்.