வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பலமுனைப் போட்டிகளை எதிர்கொண்டுவருகிறார். இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.

இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 56 பக்க குற்றப் பத்திரிகையில், ஹண்டர் பைடன் 2016 முதல் 2020 வரை 7 மில்லியனுக்கும் அதிகமான டாலர் சம்பாதித்திருக்கிறார். இந்தப் பணத்தைப் எஸ்கார்ட், தோழிகள், சொகுசு ஹோட்டல்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் என ஆடம்பரமாகச் செலவழித்திருக்கிறார். ஆனால், 2016 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் செலுத்தவேண்டிய குறைந்தபட்ச 1.4 மில்லியன் டாலர் வரியைச் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

அதிபர் தேர்தலுக்காக தயாராகி வரும் நிலையில், ஹண்டரின் வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டு ஜோ பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, 2018-ல் துப்பாக்கி வாங்கியது தொடர்பாக ஹண்டர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news