Tamilசெய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கோர்ட்டு தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஐகோர்ட்டு வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பு ஜூலை 11-ந்தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு சட்டப்படி செல்லும் என்றும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் அறிவித்துள்ளது.

இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை கோர்ட்டு அங்கீகரித்துள்ளது. கட்சிக்கு தேவை ஒற்றைத்தலைமை என்பதையும் கோர்ட்டு அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமல்ல கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட ஓ.பி.எஸ். நீக்கமும் செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எந்த அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டினார்களோ அதே அடிப்படையில் தான் கட்சி விதிகளுக்கு உட்பட்டு எடப்பாடி பழனிசாமியும் பொதுக் குழுவை கூட்டினார். தர்மமும், நியாயமும் வென்றுள்ளது. ஓ.பி.எஸ். தரப்பு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றால் அதை எந்த மாதிரி கையாள்வது என்பதை சட்ட வல்லுனர் குழு கூடி முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.