வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ளது. 5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ. 2 வீதம் 10 ரூபாய் உயர்ந்து தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 ரூபாய் அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டு ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தி விட்டதாக தெரிவித்துள்ளது. உண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அதே விலையை வணிக பயன்பாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கவே வணிக நிறுவனங்களுக்கான விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.