வணிக சிலிண்டரின் விலை குறைப்பு
எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சமையல் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாற்றியமைக்கும். அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை வரை 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது 19 ரூபாய் குறைக்கப்பட்டு 1911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. சென்னையில் 1911 ரூபாய் விற்பனை செய்யப்படும் நிலையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா பெங்களூரு நகரங்களில் விலையில் சிறிது மாற்றம் இருக்கும். கடந்த மாதமும் வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.