வணிகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மை பற்றி விவாதித்தோம். – ஐக்கிய அமீரகத்தின் அமைச்சர் உடனான சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌத் அல்மரி ஆலோசனை மேற்கொண்டார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தலைமைச் செயலகத்தில் இன்று ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் எச்.இ.அப்துல்லா பின் தௌத் அல்மரியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் தமிழ்நாட்டின் சிறந்த நண்பர் மற்றும் நலம் விரும்பி ஆவார். மார்ச் 2022ல் நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றபோது அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.
எங்கள் சந்திப்பின் போது, MSMEகள் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி, தளவாடங்கள், சில்லறை விற்பனை, மலிவு வீடுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் வணிகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மை பற்றி விவாதித்தோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.