Tamilசெய்திகள்

வட சிரியாவில் ராக்கெட் தாக்குதல் – 15 பேர் பலி

சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு சிரியாவில் குர்து இன போராளிகள் வசம் உள்ள நகரில் துருக்கி ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகினர்.

இந்நிலையில் வடக்கு சிரியாவின் அல்-பாப் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த சந்தை பகுதியில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.12 பேர்காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் மிக மோசமான படுகொலை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு மைய தலைவர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியாவின் குர்து இன போராளிகள் படை வெளியிட்ட அறிக்கையில், அல்-பாப் நகரம் மீது தங்கள் போராளிகள் ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தவில்லை என்று தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் குறித்து சிரிய அரசு தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.