X

வட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறி உள்ளது.

இதையடுத்து மழை முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் ஆய்வு செய்வும் மாவட்ட வாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 42 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 11 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே கண்காணிப்பு அதிகாரிகளாக செயல்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: south news