Tamilசினிமா

வட இந்தியர்களுக்கு ஆதரவாக பதிவு வெளியிட்ட விஜய் ஆண்டனி – வலுக்கும் எதிர்ப்பு

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இதையடுத்து இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலரை படக்குழு வெளியிட்டது.

அவ்வப்போது சமூக குருத்துக்களை பதிவிட்டு வரும் விஜய் ஆண்டனி தற்போது பதிவிட்டிருக்கும் கருத்து பலரையும் திசை திருப்பியுள்ளது. அவர் பதிவிட்டிருப்பது, வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பதிவிட்டுள்ளார்.

வட இந்திய மாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருவதால் சமீப காலமாக அவர்களுக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் விஜய் ஆண்டனியின் இந்த கருத்து பலரின் எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும் சந்தித்து வருகிறது. இருப்பினும் இவர் பதிவிட்டிருப்பது யாரை குறிப்பிட்டுள்ளது என்று உறுதி படுத்தும் வகையில் இல்லை.