Tamilசினிமா

வடிவேல் பாலாஜி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு அவருடைய கை, கால்கள் செயலிழந்தன. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி மரணமடைந்தார். 42 வயதாகும் அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதி உதவியும் அளித்தார்.