வடமேற்கு பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் தேரா இஸ்மாயில் கான் நகரில் காவல்துறையை குறிவைத்து வெடி குண்டு வீசப்பட்டது. இதில், 5 பேர் கொல்லப்பட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அப்பகுதியில், போலீசார் ரோந்து செல்லும் பாதையில் வெடிகுண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி முகமது அட்னான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதலா அல்லது வெடிகுண்டு வைக்கப்பட்டதா என்பது உடனடியாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

டேரா இஸ்மாயில் கான் நகரம் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள சட்டமற்ற பழங்குடி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இது நீண்ட காலமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய போராளிகளின் தாயகமாக உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news