‘வடசென்னை 2’ விரைவில் வரும் – வெற்றிமாறன் அறிவிப்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து இப்படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் திரைப்படம் வந்ததால், வடசென்னை படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. மேலும் இயக்குனர் வெற்றிமாறன், சூரியை வைத்து ஒருபடமும், சூர்யாவை வைத்து ஒரு படமும் இயக்குவதால் வடசென்னை 2 உருவாகாது என்று கூறப்பட்டது.
இந்நிலையில், விரைவில் வட சென்னை-2 திரைப்படம் வரும் என்றும், அதற்கான கதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.